தமிழக பட்ஜெட் - வெளிமாநிலங்களில் தமிழ் புத்தக திருவிழா.!
tamizh book festival in other state minister thangam thennarasu info
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து வருகிறார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:
* உலகப்பொதுமறையான திருக்குறளை மேலும் 45 மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடியும், 500 தமிழ் இலக்கிய நூல்களை மொழிபெயர்க்க ரூ.10 கோடியும் நிதி ஒதுக்கப்படும்.
* ஓலை சுவடிகளை மின்பதிப்பாக்கம் செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* சிங்கப்பூர், துபாய், மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்திட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* தமிழின் தொன்மை தொடர்ச்சியை அறிய மதுரையில் உலகத் தமிழ் கண்காட்சி மையம் அமைக்கப்படும்.
* இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து தான் தொடங்க வேண்டும்.
* இனி மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற மற்ற நகரங்களிலும் தமிழ் புத்தக திருவிழா நடத்தப்படும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
tamizh book festival in other state minister thangam thennarasu info