தஞ்சையில் பரபரப்பு: பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்!
tanjore lawyers protest
தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு இன்று இரண்டாவது நாளாக பணிகளை புறக்கணித்து, இந்திய தண்டனைச் சட்டம்,குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் போன்ற சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்ய அரசு தாக்கல் செய்த மசோதாவை திரும்பி பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் திரண்டனர்.
பின்னர் அங்கிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்றனர். ராமநாதன் ரவுண்டானா வழியாக பேரணி தொடங்கி தஞ்சை ரயில் நிலையம் முன்பு முடிவடைந்தது.
அதன் பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வழக்கறிஞர் சங்கத் தலைவர், தலைமை ஏற்று நடத்தினார்.
மேலும் செயலாளர், முன்னாள் தலைவர், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஹிந்தி திணிப்பை கண்டித்து அதற்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷமீட்டனர். இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.