தஞ்சையில் பெரும் சோகம்! பெற்றோர்களே உஷார்! மூச்சுத் திணறி பலியான சிறுவர்கள்! - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

தொடர் விடுமுறை காரணமாக திருவையாறு காவிரி ஆற்றில் இன்று சிறுவர்கள் குளித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஆழம் அதிகம் உள்ள ஆற்றில் குளித்த இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர்.

ஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள் அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் உதவியுடன் 2 சிறுவர்களையும் சடலமாக மீட்டெடுத்தனர். 

உயிரிழந்த சிறுவர்கள் ராஜா நகரை சேர்ந்த ஹரி பிரசாத்(வயது 15), பிரேம் குமார்(வயது 14) என்பது தெரியவந்துள்ளது. 

 

இதற்கிடையே தஞ்சை லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் வாந்தி பேதி காரணமாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த வாரம் அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் வாந்தி பேதி ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

இந்த சம்பவம் லட்சுமிபுரம் பகுதிகள் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tanjore thiruvaiyaru to child death in Kaveri river


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->