மதுபிரியர்களுக்கு அலெர்ட்: இரண்டு நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
TASAMAC month of Jan 2024 2 days Leave
நடப்பு ஜனவரி மாதத்தில் தமிழக அரசின் மதுபான கடைகளான டாஸ்மார்க் கடைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை விடப்பட உள்ளது.
திருவள்ளூர் திருவள்ளுவர் தினமான ஜனவரி 13ஆம் தேதியும், இந்திய நாட்டின் குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் QR கோடு முறையில் பில் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, அது தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது.
தொழில்நுட்ப கோளாறு என்று கூறி, டாஸ்மார்க் கடைகளில் முறையாக பில் வழங்கப்படுவதில்லை என்று மது பிரியர்கள் குற்றம் சாட்டுவதாக சொல்லப்படுகிறது.
மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கப்படுவதாகவும், டிஜிட்டல் முறையில் பேமெண்ட் செய்தாலும் கூடுதலாகவே பணம் வசூலிப்பதாகவும் மது பிரியர்கள் குற்றம் சாட்டுவதாக சொல்லப்படுகிறது.
English Summary
TASAMAC month of Jan 2024 2 days Leave