டாஸ்மாக் பார்களை மூட முடியாது., தமிழக அரசு மேல்முறையீடு.!
TASMAC BAR ISSUE TNGovt March
தமிழக அரசின் டாஸ்மாக் பார்களை மூட உத்தரவிட்டதை எதிர்த்து, டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
டாஸ்மாக் மதுபான பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சரவணன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று நீதிபதி சரவணன் உத்தரவிட்டிருந்தார். மேலும், மதுக்கடைகளின் அருகே பார் அமைக்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அதில், டாஸ்மாக் பார்களை கடைகளில் ஒட்டி நிறுவுவதற்கு அதிகாரம் உள்ளதாகவும், நீதிபதி இதனை தவறாக புரிந்து கொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். எனவே அவரின் உத்தரவை ரத்து செய்யவேண்டும். டாஸ்மாக் பார்களை தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரியவருகிறது.
English Summary
TASMAC BAR ISSUE TNGovt March