குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!
Tasmac closed in kollimalai 3 days
தமிழகத்தில் திருவள்ளுவர் தினம், மகாவீர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் போன்ற விசேஷ நாட்களில் தமிழக டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகின்றது.
இதுதவிர அந்தந்த மாவட்ட கோவில் திருவிழா போன்ற உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட பகுதிகள் மற்றும் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
இந்த நிலையில் கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி அவர்களை போற்றும் வகையில் தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் வரும் ஆகஸ்ட் 2 & 3 ஆகிய 2 நாட்கள் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரிவிழா கொல்லிமலையில் கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி அசம்பா விதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் கொல்லிமலையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கொல்லிமலையில் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதனை மீறி கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
English Summary
Tasmac closed in kollimalai 3 days