டாஸ்மாக் பொங்கல் மது விற்பனை எத்தனை கோடி தெரியுமா?!
TASMAC Pongal Sale date 2025
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ச்சியான விடுமுறைகளில் டாஸ்மாக் மது விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, தமிழகம் முழுவதும் ஜனவரி 13 முதல் 16 வரை மது விற்பனை ரூ. 725.56 கோடி என்று தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, அதே காலகட்டத்தில் ரூ. 678.65 கோடியாக இருந்த மது விற்பனை இந்த ஆண்டில் ரூ. 46 கோடி அதிகரித்துள்ளது
தினசரி விற்பனை சராசரியாக ரூ. 145 கோடியில் இருந்து, விடுமுறை நாட்களில் 67% அதிகரித்து, தினசரி ரூ. 241.85 கோடியாக மது விற்பனை உயர்ந்துள்ளது.
போகி தினத்தில் (ஜன. 13) ரூ. 185.65 கோடி,
பொங்கல் நாளில் (ஜன. 14) ரூ. 268.46 கோடி,
காணும் பொங்கலில் (ஜன. 16) ரூ. 271 கோடிக்கான மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
இதில், திருச்சி ரூ. 179 கோடி விற்பனையுடன் முதலிடத்தையும், சேலம் ரூ. 151.50 கோடி விற்பனையுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் ரூ. 142 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளது.
English Summary
TASMAC Pongal Sale date 2025