12ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டீ மாஸ்டர்.. 52 வயது நபர் போக்சோவில் கைது.!
Tea master raped 12th std girl get pregnant in kanniyakumari
நாகர்கோவில் அருகே பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை கர்ப்பமாக்கிய 52 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 52). இவர் நாகர்கோயில் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் அவரது உறவினர் மகளான 12 ஆம் வகுப்பு மாணவியுடன் தகாத முறையில் பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது பக்கத்து வீட்டுக்காரரான சிவகுமார் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர் நாகர்கோயில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
English Summary
Tea master raped 12th std girl get pregnant in kanniyakumari