ஆசிரியரின் வாட்ஸ் அப் ஸ்டெட்டஸால் அதிர்ந்து போன மாணவியின் குடும்பத்தினர்.. ஆசிரியரை நையப்புடைத்து காவல்துறையிடம் விசாரணை..! - Seithipunal
Seithipunal


மாணவியின் ஆபாசபடத்தை வாட்ஸ் அப் ஸ்டெட்டஸாக வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம், எக்குந்தி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.  இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த பல மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மகேஷ் சிவலிங்கப்பா பிரதாரா என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் அந்த பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து ஆத்திரமடைந்த மகேஷ், தனது செல்போன் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸில் மாணவியின் ஆபாச படத்தை பதிவிட்டதை அடுத்து மாணவியின் திருமணம் தடைப்பட்டுப் போனது. 

இதனால், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்த ஆசிரியர் மகேஷை சரமாரியாக தாக்கினர். பின்னர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher arrasted who sexually abused Student Karnatka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->