பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது.!

சென்னையில் உள்ள கொரட்டூரில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் அயனாவரம் செட்டித்தெருவை சேர்ந்த பழனிவேல் என்பவர் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.

இவர் அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளை வகுப்பறையிலேயே தன்னுடைய மடியில் அமர வைத்து தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் பழனிவேல் தன்னுடைய மகளை மடியில் அமர வைத்து கன்னத்தில் முத்தமிட்டதாகவும், தொடக்கூடாத இடங்களில் தொடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர். 

இந்தப் புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஆசிரியர் பழனி ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மேலும் சில மாணவிகளுக்கும் இதேபோன்று பாலியல் ரீதியிலான தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆசிரியர் பழனிவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher arrested for sexuall harassment in chennai korattur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->