திருச்சியில் பரபரப்பு.. பள்ளி மாணவனுடன் ஓடிப்போய் ரகசியமாக திருமணம் செய்து கொண்ட ஆசிரியை.. பிறகு நடந்த விபரீதம்.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவன், கடந்த ஐந்தாம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், பெற்றோரிடம் விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவன் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் மாணவன் கிடைக்காத காரணத்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் மாணவன் படிக்கும் அதே பள்ளியில் ஆசிரியராக இருந்த சர்மிளா (வயது 26) என்பவரும் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து, காணாமல் போன மாணவன் ஆசிரியரிடம் சென்று இருக்கலாம் என காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, ஆசிரியை சர்மிளாவின் செல்போன் நம்பரை காவல்துறையினர் டிரேஸ் செய்து கண்காணித்து வந்த போது வேளாங்கண்ணி, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி என மாறி மாறி ஆசிரியை சென்றது தெரிந்தது. கடைசியில் புதூரில் இருப்பது தெரியவந்தது. புதூரில் உள்ள தோழி ஒருவரின் வீட்டில் ஆசிரியர் சர்மிளாவும் மாயமான மாணவனும் தங்கியிருப்பதை காவல்துறை உறுதி செய்தன. 

இதைதொடர்ந்து காவல்துறையினர் விரைந்து சென்று ஆசிரியை சர்மிளா மற்றும் அந்த மாணவனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் இருவரும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் ஆசிரியை சர்மிளா மீது காவல்துறையின் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவனை அவரது பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher marriage to school student


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->