நைசாக பேசி.. லேப்க்கு அழைத்து.. 13 வயது சிறுவனிடம்.. ஆசிரியரின் தகாத செயல்.! கன்னியாகுமரியில் பரபரப்பு.!
Teacher sexual harrasment to 13 school boy in kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில், இயற்பியல் ஆசிரியராக வேலை செய்து வருபவர் தான் அருள்ஜீவன் (வயது 47). இதே பள்ளியில் ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவன் (வயது 13) ஒருவன் படித்து வருகின்றான்.
கடந்த ஜூன் 14-ந்தேதியில் அந்த சிறுவன் மதிய உணவு சாப்பிட்ட பின்னர், கழிவறைக்கு சிறுநீர் கழிக்க சென்றுள்ளான். அப்பொழுது, அங்கு வந்த அருள் ஜீவன் அந்த சிறுவனின் தோல் மேல் கை போட்டு ஆசையாக பேசி அங்கிருந்த ஆய்வகத்திற்கு கூட்டிச்சென்று இருக்கின்றார்.
அப்போது, ஆய்வகத்தில் வைத்து அருள் ஜீவன் அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ந்து போன சிறுவன் வலியுடன் கத்திக்கொண்டே ஆய்வகத்தில் இருந்து வீட்டுக்கு தப்பியோடியுள்ளான். வீட்டுக்கு சென்ற பின்னும் சிறுவன் அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட வலியால் துடித்துள்ளான்.
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் 5 நாட்களுக்கு பின் தந்தையிடம் தனக்கு நடந்த சம்பவம் பற்றி சிறுவன் கூறியுள்ளான். பின் சிறுவனின் தந்தை அவனை சிகிச்சைக்காக பத்மநாபபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இதனைங கடந்த ஜூன் 20-ந் தேதி தந்தை தலைமை ஆசிரியரிடம் சென்று புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து சிறுவனின் தந்தை குளச்சல் காவல் நிலையத்திற்கு சென்று தனது மகனுக்கு நேர்ந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் அருள் ஜீவனை கைது செய்ய முயற்சித்தனர்.
அதற்குள் அருள் ஜீவன் விஷயம் கேள்விப்பட்டு தலைமறைவாகிவிட்டார். தலைமறைவான அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Teacher sexual harrasment to 13 school boy in kanniyakumari