அரசு தொழில்நுட்ப பல்கலைக் கழக ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்..MLA  கல்யாணசுந்தரம் பேச்சுவார்த்தை! - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியில் அமைந்துள்ள புதுச்சேரி அரசுந்தொழில்நட்ப பல்கலைக் கழகத்தில் புதுவை பொறியியல் கல்லூரி ஆசிரியர்களை சந்தித்து MLA  கல்யாணசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியில் அமைந்துள்ள புதுச்சேரி அரசுந்தொழில்நட்ப பல்கலைக் கழகத்தில் புதுவை பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கடந்த ஒரு வாரமாக வகுப்பறையில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் மாணவர் நலன் கருதி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் காலி இடங்களை நிரப்ப வேண்டும்.CAS உறுப்பினர்களுக்கு திருத்தப்பட்ட சம்பளத்தை செயல்படுத்த வேண்டும். ஆட்சி மன்றக் குழு (BoG) அமைக்க வேண்டும்.PTU பேராசிரியர்கள் பணி ஓய்வு வயதை 62 லிருந்து 65 ஆக உயர்த்த வேண்டும்.புதிய பதவிகள் மற்றும் பொறுப்புகள் நியமனத்தில் சீனியாரிட்டி முறையை செயல்படுத்த வேண்டும்.PTU ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை Grant in Aid இல் அரசு சேர்க்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக வகுப்பறையில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் போராட்டம் நடைபெறும் PTU வளாகத்திற்கு சென்று அவர்களது போராட்டம் தொடர்பாக துணைநிலை ஆளுநர்,  துறை அமைச்சர், முதலமைச்சர், துறை செல்யளர் மற்றும் துறை இயக்குநர் ஆகியோரோடு கலந்து பேசி புதுவை பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்து PTU பேராசிரியர்கள் போராட்டத்தில் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teachers of Government Technical University strike MLA Kalyanasundaram talks


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->