சென்னை | போதையில் தடுமாறி நடுரோட்டில் விழுந்த வாலிபர் - கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்!
teenager accident death police inquiry
சென்னை, புளியந்தோப்பு தெருவில் உள்ள டாஸ்மார்க் மது கடைக்கு நேற்றிரவு ஒரு வாலிபர் வந்து மது வாங்கி குடித்துவிட்டு புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
மது போதையில் தள்ளாடியபடி சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக தங்கச்சாலையில் இருந்து அம்பத்தூர் செல்லும் அரசு பேருந்து வந்தது.
திடீரென வாலிபர் மதுபோதையில் நிலை தடுமாறி நடுரோட்டில் விழுந்து விட்டார். இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் வாலிபரின் மீது அரசு பேருந்து பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவர் வைத்திருந்த பையில் மதுபாட்டில்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் இருந்தது.
இந்த விபத்து அவர் வீட்டிற்கு உணவு வாங்கிச் செல்லும்போது நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
English Summary
teenager accident death police inquiry