வயிற்று வலி சிகிச்சைக்காக சென்ற வாலிபர் மரணம்.. அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!
Teenager dies after treatment for stomach pain Relatives lay siege to government hospital
ஆம்புலன்ஸில் செவிலியர் மற்றும் ஊழியர்கள் இல்லாமல் நோயாளியை அனுப்பியதால் வாலிபர் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் ஏனாம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் வயிற்று வலி காரணமாக அரசு மருத்துவமனைக்கு வந்த அய்யன்னா நகரை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், ஆந்திர மாநிலம் காக்கிநாடா மருத்துவமனைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
ஆம்புலன்ஸில் செவிலியர் மற்றும் ஊழியர்கள் இல்லாமல் அனுப்பியதால் காக்கி நாடா செல்லும் வழியிலேயே ஸ்ரீநிவாஸ் உயிரிழந்துள்ளார்.

ஏனாம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் சீனிவாஸ் உயிரிழந்ததாக கூறி,அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது போலீசார் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
English Summary
Teenager dies after treatment for stomach pain Relatives lay siege to government hospital