அரசு வேலை மீது ஆசை: பட்டதாரி குடும்பத்தாரிடம் கைவரிசை காட்டிய பிரமுகர்!  - Seithipunal
Seithipunal


திருப்பூர், வடுகபாளையத்தை சேர்ந்த வாலிபர் பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கிராம உதவியாளர் வேலைக்கு வாலிபரை சேர்த்து விடுவதாக தெரிவித்து அதற்கு ரூ . 6 லட்சம் செலவாகும் என தெரிவித்துள்ளார். 

வாலிபரின் குடும்பத்தினர் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு பிரமுகரிடம் ரூ. 6 லட்சம் பணத்தை இரண்டு தவணைகளாக கொடுத்துள்ளனர். 

பணம் கொடுத்து சுமார் ஆறு மாதங்கள் ஆகியும் அரசு வேலை கிடைக்காததால் பிரமுகரிடம் வாலிபரின் குடும்பத்தினர் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். 

அதற்கு பிரமுகர் என்னிடம் பணம் இல்லை. திருப்பூரை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து வேலைக்காக பேசி உள்ளேன் என தெரிவித்துள்ளார். 

இருப்பினும் வாலிபர் குடும்பத்தினர் தொடர்ந்து பணம் கேட்டு வந்ததால் பிரமுகர், உன்னால் ஆனதை பார்த்துக்கொள் என மிரட்டி உள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இது குறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். 

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு வேலைக்காக பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர் மற்றும் அந்த பணத்தை பெற்றவர் பேசிக் கொள்ளும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teenager get government job 6 lakhs fraud


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->