நெல்லையில் ஒரே கல்லில் 2 மாங்காவிற்கு ஆசைப்பட்ட தாசில்தார்!...மாவட்ட ஆட்சியர் அதிரடி முடிவு! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம், திசையன்விளை தாசில்தாராகவும், நாங்குநேரி நதிநீர் இணைப்பு தாசில்தாராகவும் செயல்பட்டு வந்த  செல்வக்குமார், தற்போது திருநெல்வேலி நெடுஞ்சாலைத்துறை தாசில்தாராக பணியாற்றி வருகிறார்.

மேலும் இவர் நாம் தமிழர் கட்சியில் மண்டல செயலராக செல்வன் குமரன் என்ற மாற்றுப்பெயரில்  செயல்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர்  சீமானுடன் செல்வக்குமார் பங்கேற்ற தகவல் சமூக ஊடகங்களில் வெளியானது.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்த நிலையில், ஆட்சியர் தலைமையில் நேற்று மாலை விசாரணை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவில் தாசில்தார் செல்வக்குமார் பணியில் இருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அவரிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tehsildar who wanted 2 mango in one stone in nellai district collector action decision


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->