ரீல்ஸ் பார்த்தபடி பேருந்து ஒட்டிய தற்காலிக ஓட்டுநர் - போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


போக்குவரத்துக்கு கழகத்தில் தற்காலிக பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் சில நேரத்தில் செய்யும் தவறுகளால் பனி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், செல்போனில் ரீல்ஸ் பார்த்தபடி அரசுப் பேருந்து இயக்கிய தற்காலிக ஓட்டுனர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதாவது, ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. இந்தப் பேருந்தை தற்காலிக ஓட்டுநர் ஒருவர் இயக்கி வந்துள்ளார். அப்போது அவர் செல்போனில் ரீல்ஸ் பார்த்தபடி பேருந்தை இயக்கி வந்துள்ளார்.

இதனை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் படி விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த தற்காலிக ஓட்டுனர் பார்த்திபனை, போக்குவரத்து துறை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

temporary govt bus driver dismiss for watch reels and drive bus


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->