தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் தொடர் முன்னிலை.!!
Tenkasi District Major Constituency AIADMK May be Victory 1 PM Update
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, தொடர்ந்து 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில், அ.தி.மு.க. - தி.மு.க. - 130 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - காங்.- 14 இடங்களில் நேரடியாகவும், தி.மு.க. - பா.ஜ.க - 14 இடங்களில் நேரடியாகவும், தி.மு.க. - பா.ம.க. - 18 இடங்களில் நேரடியாகவும், தி.மு.க. - த.மா.கா - 4 இடங்களில் நேரடியாகவும், காங். - த.மா.கா. - 2 இடங்களில் நேரடியாகவும், காங். - பா.ஜ.க 5 இடங்களில் நேரடியாகவும், காங். - பா.ம.க. 3 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் - 5 இடங்களில் நேரடியாகவும், பா.ஜ.க - இந்திய கம்யூ - 1 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூ. - 5 இடங்களில் நேரடியாகவும், பா.ம.க. - மார்க்சிஸ்ட் கம்யூ. - 1 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - விடுதலை சிறுத்தை கட்சிகள் - 5 இடங்களில் நேரடியாகவும், பா.ம.க. - வி.சி.க - 1 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - கொ.ம.தே.க. - 3 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - முஸ்லிம் லீக் - 3 இடங்களில் நேரடியாகவும் மோதுகிறது.
அ.தி.மு.க. - தி.மு.க. - 130 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - காங்.- 14 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூ. - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - விடுதலை சிறுத்தை கட்சிகள் - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - கொ.ம.தே.க. - 3 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - முஸ்லிம் லீக் - 3 இடங்களில் நேரடியாகவும் மோதுகிறது.
இந்நிலையில், 12.55 மணி நிலவரப்படி, தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். சங்கரன்கோவில் தொகுதியில் மட்டும் திமுக முன்னிலை வகிக்கிறது. தென்காசி தொகுதியில் போட்டியிடம் அதிமுக வேட்பாளர் செல்வமோகன் தாஸ் 15659 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 11143 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஆலங்குளம் அதிமுக வேட்பாளர் பால் மனோஜ் பாண்டியன் 6378 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் பூங்கோதை 4964 வாக்குகள் பெற்றுள்ளார். கடையநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி 20346 வாக்குகள் பெற்றுள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tenkasi District Major Constituency AIADMK May be Victory 1 PM Update