உடல் நசுங்கி உயிரிழந்த காவலாளி.. திடீரென மறியலில் ஈடுபட்ட மக்கள்! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தென்காசி, கடையநல்லூர் சொக்கம்பட்டி மலையடிவாரத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பிள்ளையார் பாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அதில் தென்னை, மாமரம் உள்ளிட்ட மரங்கள் இருப்பதால் தோட்டத்தினை சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த மூக்கையா என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். 

சமீப காலமாக தோப்பு அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இரவு நேரத்தில் யானை வந்து கொண்டிருப்பதால் இரவிலும் தோட்டத்தை காவல் காக்க வேண்டும் என்பதற்காக தோட்டத்தில் உரிமையாளர் நேற்றிரவு மூக்கையாவை அழைத்து தோப்பிற்கு சென்றார். 

அங்கு மூக்கையா இரவு காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒற்றை யானை தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. இதனை பார்த்த மூக்கையா அதனை விரட்ட முயற்சி செய்துள்ளார். அப்போது மூக்கையாவை யானை துரத்தியதால் அவர் ஓடிய போது தடுமாறி கீழே விழுந்துள்ளார். பின்னால் வந்த யானை அவரை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே மூக்கையா உடல் நசங்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இது குறித்த தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூக்கையா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையே மூக்கையாவின் மனைவி அவரது மூன்று மகள்கள், ஊர் மக்கள் என அந்த பகுதியில் திரண்டு மூக்கையாவின் இறப்பிற்கு இழப்பீடு வழங்க கோரி மறியலில் ஈடுபட முயன்றனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi kadayanallur watchman relatives tried protest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->