தென்காசி: அரசு பள்ளியில் 10க்கும் மேற்பட்ட 12ஆம் வகுப்பு மாணவிகள் மயக்கம்! மருத்துவமனையில் அனுமதி!
Tenkasi Senkottar Govt School Students Hospital
வகுப்பறையில் ரசாயன பாட்டில் உடைந்து விபத்து ஏற்பட்டதில், 12ஆம் வகுப்பு மாணவிகள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறையில் ரசாயன பாட்டில் உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது வகுப்பறையில் இருந்த 12ஆம் வகுப்பு மாணவிகள் 10க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர்.
இதனையடுத்து, மாணவிகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், மேல் சிகிச்சைக்காக 3 மாணவிகள் தென்காசி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து செங்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு:
சேலம் அரசு மருத்துவமனையில், பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை மாஸ்க் அணிந்த பெண் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையின் 2வது தளத்தில் இருந்து குழந்தையை பெண் திருடி சென்றுள்ளார். சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம், குழந்தையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.
English Summary
Tenkasi Senkottar Govt School Students Hospital