தசரா திருவிழாவில் பயங்கர தீ விபத்து!...பக்தர்கள் நிலை?...ஓலை குடிசை, 9 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசம்! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவிற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்தும், பல்வேறு வேடங்கள் அணிந்தும் கோவிலுக்கு செல்வார்கள். மேலும் நெல்லை மாவட்டத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆண்டும் வேடங்கள் அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.

இதற்கிடையே, தசரா பக்தர்கள் குழுவினர் நெல்லை அண்ணா நகர் பகுதியில் ஓலை குடிசை அமைத்து தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை பக்தர்கள் அனைவரும் குலசேகரபட்டினத்திற்கு புறப்பட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது, இவர்களுக்கு உணவு சமைத்த குழுவினர் மட்டுமே அந்த ஓலை குடிசையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இன்று அதிகாலை ஓலை குடிசையில் வைக்கப்பட்டிருந்த விளக்கு ஒன்று கவிழ்ந்ததில், எதிர்பாராத விதமாக ஓலை குடிசை முழுவதும் தீ பரவியது.

இதையடுத்து சமையல் குழுவினர் அலறி அடித்துக்கொண்டு வெளியேறி, உடனடியாக பாளை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு விரைந்த தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு, காயம் ஆகியவை யாருக்கும் ஏற்படவில்லை. ஆனால் குடிசையில் நிறுத்தப்பட்டிருந்த பக்தர்களின் 9 மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகி முற்றிலும் நாசமாகிய நிலையில், இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrible fire accident during dussehra festival devotees condition thatched hut two wheelers completely burnt down


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->