நெல்லையில் பயங்கரம்!...திரையரங்கிற்கு பெட்ரோல் குண்டு வீசி மர்ம நபர்கள் தப்பியோட்டம்! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில் உள்ள திரையரங்கு  ஒன்றில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு  திரையரங்கு வளாகத்திற்குள் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பியோடிய நிலையில், மொத்தம் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால், பொருட்சேதம் எதுவும் ஏற்பட வில்லை என்று சொல்லப்படுகிறது.

இருந்த போதிலும், இந்த சம்பவம் குறித்த சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த மாதம் 31-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய நிலையில், சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் இதுவரை ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrible in nellai miscreants escape by throwing petrol bombs at the theater


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->