கோயம்பேட்டில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பயங்கரவாதி கைது! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு அருகே பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த அனோவர் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அன்சார் ஆல் இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே ஹபிபுல்லா என்ற பயங்கரவாதியை மேற்குவங்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

எந்த நிலையில் அஜிபுல்லா கொடுத்த தகவலின் பெயரில் கோயம்பேடு அருகே தலைமுறை வாழ்ந்து வந்த அனோவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து உபா சட்டம், இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுக்க நினைத்தல் மற்றும் தாக்குதல் நடத்த திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மேற்கு வாங்க போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் குடியிருப்பு வளாகம் அருகே பணிபுரிந்து வந்த அனோவரை மேற்கு வங்கம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

terrorist from West Bengal arrested in koyambedu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->