ஆசிரியர் தகுதி தேர்வு (TET EXAM) இரண்டாம் தாள் தேர்வு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு.!
TET 2nd paper exam will be December
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிகளில் சேர ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அந்த வகையில் ஆசிரியர் தகுதி தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. இதில், தாள்-1-ல் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், தாள்-2-ல் வெற்றி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் தகுதி பெறுவார்கள்.
இந்த நிலையில் முதல் தாளுக்கு 2,30,878 பேரும், 2ம் தாளுக்கு 4,00,886 பேரும் விண்ணப்பித்தனர். இதில் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை கணினி வழியில் நடத்தி முடிக்கப்பட்டது.

இதனையடுத்து 2ம் தாள் தேர்வு எப்பொழுது நடைபெறும் என தேர்வர்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாள் டிசம்பர் மாதம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.
English Summary
TET 2nd paper exam will be December