பேச்சுவார்த்தை தோல்வி! அரசாணை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்! TET ஆசிரியர்கள் திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் தலைமை அலுவலகமான பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அனைத்து ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதனை அடுத்து சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் 4 ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதன்படி இடைநிலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்களின் சங்க நிர்வாகிகள், பகுதி நேர ஆசிரியர்களின் இரண்டு சங்கங்களை நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அமைச்சர் அன்பின் மகேஷ் முதலில் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும் என வெளியிடப்பட்ட அரசாணை எண் 149ஐ திமுக தனது தேர்தல் வாக்குறுதியின் படி ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதிமொழி அளித்தார். அதனை ஏற்க மறுத்த ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்கள் சங்கத்தினர் இதேபோன்று பல கட்ட போராட்டத்தின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டு அது நிறைவேற்றாமல் உள்ளதால் அரசாணை எண் 149 ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிப்பு வெளியானால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சங்கத்தினரின் போராட்டம் தொடரும் என அச்சங்கத்தின் தலைவர் வடிவேல் சுந்தர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TET teachers announced protest will continue until GO cancelled


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->