ஏசி, ஃபேன், எல்இடி! சென்னை அருகே வீட்டிலேயே ஹைடெக் முறையில் கஞ்சா பயிர் செய்த கும்பல்!
Thambaram Ganja madampakkam youths
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில், வீட்டில் ஏசி, ஃபேன், எல்இடி விளக்குகள் உடன் உயர் ரக கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனை செய்த நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கஞ்சா பழக்கம் அதிகரித்துவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவது கட்டுப்படுத்துவதற்கு தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் கஞ்சா வியாபாரிகள், விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்கும் அளவிற்கு தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தாம்பரத்தில் வீட்டிலேயே அதிநவீன வசதிகளுடன் கஞ்சா செடி வளர்த்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தாம்பரம், மாடம்பாக்கம் பகுதியில் உள்ள மதுபான பார்கள் மற்றும் டாஸ்மார்க் கடை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கஞ்சா வாங்குவது போல் அந்த கும்பலிடம் நைசாக பேசிய போலீசார், அவர்களை பின்தொடர்ந்து அவர்கள் வீட்டின் உள்ளே புகுந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டின் உள்ளே நான்கடி உயரம் உள்ள கஞ்சா செடிகள் ஹைடெக் முறையில் வளர்த்து வருவது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா செடிகளை கைப்பற்றிய போலீசார், அவர்களிடமிருந்த போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சக்திவேல் என்ற இளைஞர் வீடு வாடகைக்கு எடுத்து, கிரிப்டோ கரன்சி மூலமாக வெளிநாடுகளில் இருந்து உயர்ரக கஞ்சா செடியின் விதைகளை வாங்கி, ஆய்வாகம் போல் அமைத்து வளர்த்து வந்தது தெரிய வந்துள்ளது.
கஞ்சா செடி வளர்ப்பதற்கு உண்டான சூழலை ஏற்படுத்துவதற்காக ஏசி, ஃபேன், எல்இடி விளக்குகள் கொண்டு ஒரு ஆய்வகம் போல் அமைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கைது செய்யப்பட்ட சக்திவேல் தலைமையிலான நான்கு பேர் கொண்ட கும்பலிடம் தனிப்படை போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Thambaram Ganja madampakkam youths