தமிழக பட்ஜெட் - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்.!
thangam thennarasu submit tamilnadu budget in assembly
இன்று தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

சட்டமன்றத்தில் நிகழும் தமிழக பட்ஜெட் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் 936 இடங்களில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது, எல்லார்க்கும் எல்லாம் என்ற தத்துவத்திற்கு செயல் வடிவம் தரும் வகையில் தமிழ்நாடு பட்ஜெட் இருக்கும் என்று தெரிவித்தார். இந்த பட்ஜெட்டில் அனைத்துத் துறைக்கும் அதிகளவில் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
thangam thennarasu submit tamilnadu budget in assembly