#BigBreaking || திமுகவின் திட்டம் இதுதான்., இதற்காகத்தான் இந்த ரெய்டு., சற்றுமுன் தங்கமணி பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


அதிமுகவை அழிக்கும் நோக்கில் இது பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டியளித்துள்ளார்.

தமிழக மின்சாரத் துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி தனது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும், நெருங்கிய உறவினர்கள் பெயரிலும் 2016 முதல் 2020 வரையிலான காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்துள்ளதாக நேற்று நாமக்கல் ஊழல் தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக தங்கமணி மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவரது முன்னாள் அரசியல் உதவியாளர்கள் மற்றும் அவருக்கு நெருங்கிய நபர்கள் என சந்தேகப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் 69 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி இந்த சோதனை குறித்து தெரிவித்ததாவது,

"அதிமுகவை அழிக்கும் நோக்கில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. எனது வீட்டிலிருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் மூலம் அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்த திமுக முயற்சி செய்கிறது. அதிமுகவை அழிக்கலாம் என நினைக்கிறார்கள்., அது ஒரு காலமும் முடியாது. இதற்க்கு பின்னல் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பது எனக்கு முன்பே தெரியும்" என்று தங்கமணி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thangamani press meet after raid


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->