சயனைடு, குடும்ப பிரச்சனை! தற்கொலையா? கொலையா? தஞ்சை மாவட்ட ஆட்சியர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


தஞ்சை கீழ அலங்கம் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த விவேக் (36) என்ற இளைஞரும், குப்புசாமி என்ற முதியவரும் உயிரிழந்தனர்.

இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மதுவில் சைனைடு கலந்ததால் தான் இருவரும் உயிரிழந்து உள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்து.

மேலும், கொலை செய்ய மதுவில் விஷம் கலக்கப்பட்டதா? அல்லது விஷம் குடித்து இருவரும் தற்கொலைக்கு முயன்றனரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இறந்தவர்களின் உடல் கூறு ஆய்வில் சயனைடு விஷம் உள்ளதாக தகவல் வந்திருக்கிறது என்று, தஞ்சை மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்துள்ளார்.

மேலும், இருவர் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வருவதாகவும், முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையின் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் குறித்து சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் ஆட்சியர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THANJAAVUR TASMAC DEATH ISSUE SOME CLEAR INFO


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->