கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, இளைஞர் தற்கொலை.. தஞ்சாவூரில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் கட்டாநகரம் என்ற கிராமத்தில் முருகேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். முருகேசனுக்கு விஜய் என்ற மகன் இருக்கிறார். இவர் காரைக்காலில் தனது தாய் வழி பாட்டி வீட்டில் வசித்து வந்திருக்கிறார். 

சில நாட்களுக்கு முன்பு விஜய் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இத்தகைய சூழலில், திடீரென்று நேற்று அதே பகுதியில் அமைந்திருக்கும் வாய்க்காலுக்கு அருகில் அமர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

அப்போது அவர் ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். "என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை." என்று கூறி இதை கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஜய் எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur boy Death suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->