தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இடைநீக்கம்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என்று 40 பணியிடங்களை நிரப்ப பணம் வாங்கியதாக புகார் எழுந்தது.

அந்தப் புகாரின் படி, உரிய தகுதி இல்லாத நாற்பது பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டது.

அதற்கு அவர் முறையான பதிலை தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் திருவள்ளுவனின் பதவி காலம் வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, புகார் தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குபதிதுவு செய்து விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thanjavur tamil university vice chancellor suspend


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->