தஞ்சை | டாஸ்மாக் பாரில் மதுகுடித்த இருவர் பலி - டாஸ்மாக் கடைக்கும் சீல்! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம், கீழ அலங்கம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்தனர். 

இன்று காலை டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்னரே, அருகில் இருந்த டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்த உள்ளது.

அங்கு சென்ற விவேக் (36) மற்றும் குப்புசாமி என்ற முதியவர் இருவரும் மது வாங்கி குடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்படவே, முதியவர் சம்பவ இடத்திலேயும், இளைஞர் மருத்துவமனையிலும் உயிரிழந்து உள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பாஜக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடுமையான கண்டனத்தை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, சம்பந்தப்பட்ட பாருக்கு வருவாய் மற்றும் காவல்துறையினர் சீல் வைத்தனர். 

இந்நிலையில், சம்மந்தப்பட்ட கீழ அலங்கம் பகுதி டாஸ்மாக் கடைக்கும் தஞ்சை பொறுப்பு கோட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thanjavur tasmac bar death issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->