லாரி ஓட்டுநரை கொடூரமாக வெட்டிக்கொன்ற தம்பிகள்...! விருதுநகர் அருகே பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் சொத்து தகராறில் லாரி ஓட்டுநரை தம்பிகள் கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவியின் மகன் லாரி ஓட்டுநர் முருகன் (40). இவர் தற்பொழுது விருதுநகர் மாவட்டம் சேத்தூர் பகுதியில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இரண்டாவது மனைவியின் மகன்கள் ஞானகுருசாமி (36), காளிதாஸ் (33). இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் தொடர்பாக இவர்களுக்குள் பிரச்சனை இருந்துள்ளது.

இதனால் முருகன் மீது ஞான குருசாமி, காளிதாஸ் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை சேத்தூர் ஜீவா நகர் பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்த முருகனை வழி மறித்த இவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக முருகன் உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஞானகுருசாமியை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய காளிதாசை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The brothers who brutally murder the lorry driver in virudhunagar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->