தொழிலாளர்களை இரும்பு கரண்டியால் அடித்துக்கொன்ற ஒப்பந்ததாரர்..! கிருஷ்ணகிரியில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 தொழிலாளர்களை இரும்பு கரண்டியால் அடித்துக்கொன்ற ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சாதிநாயக்கம்பட்டி பகுதியில் உள்ள பழமையான மாரியம்மன் கோவிலை இடித்துவிட்டு, புதிதாக கட்டும் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு கடலூர் மாவட்டம் பிச்சாவரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(37) மற்றும் சிதம்பரம் வயலூரை சேர்ந்த சபரிவாசன்(58) ஆகியோர் சிமெண்ட் சிற்பங்கள் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் திடீரென நேற்று ரத்த வெள்ளத்தில் கோவிலில் பிணமாக கிடந்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கோவில் வேலைக்காக வந்திருந்த சிதம்பரம் பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் கணேசன் மற்றும் வன்னியபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய இரண்டு பேரிடம் கிடுக்குப்படி விசாரணை மேற்கொண்டனர்.

அப்பொழுது கணேசன் என்பவர் இரண்டு பேரையும் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய இரண்டு பேரும் மது அருந்திவிட்டு கோவிலில் வேலை செய்யாமல் இருந்துள்ளனர். இதனால் அவர்களை கணேசன் கண்டித்துள்ளார். இருப்பினும் அவர்கள் கேட்கவில்லை என்பதால் இருவரையும் இரும்பு கரண்டியால் அடித்துக் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The contractor beat the workers to death with an iron spoon in kirishnagiri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->