மின்துறையை யாரோ ஒருவருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிடவேண்டும்.. அதிமுக வலியுறுத்தல்!
The decision to hand over the power sector to someone should be abandoned AIADMK insists
மாநில உரிமை, மக்களின் எண்ணம், மத்திய ஆட்சியாளர்களின் எதேச்சகர போக்குகள், அரசு உயரதிகாரிகளின் ஆணவ செயல்கள் இவை அனைத்தையும் நன்கு புரிந்த வைத்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நம் புதுச்சேரி மாநிலத்தின் சொத்தாக விளங்கும் மின்துறையை யாரோ ஒருவருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் சர்வாதிகார செயலுக்கு தடை போட வேண்டும் என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவிக்கையில்: புதுச்சேரியில் லாபத்துடன் இயங்கி வரும் மின்துறையை மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தங்களுக்கு நெருக்கமான தனி நபர்களுக்கு தாரை வார்ப்பதற்க்கு புதுச்சேரி அரசு பச்சை கொடி காட்டுகிறது. இது எதிர்கால புதுச்சேரி நலனுக்கு எதிரான ஒன்றாகும். குறிப்பிட்ட தனிநபர் பயன்பெருவதற்காக மக்களின் வரிப்பணத்திலேயே மின்கட்டண வசூல் முறையை மாற்றியமைக்க சுமார் ரூ.383.58 கோடி செலவில் புதிய ஸ்மார்ட் மின் மீட்டர்களை பொருத்த வேண்டிய அவசியம் என்ன?
தற்போது சிங்கிள் பேஸ் மீட்டர் 3,46,982 மீட்டர்கள், 55,863 த்ரி பேஸ் மீட்டர், ஹெச்டி மீட்டர், எல்டிசிடி மீட்டர் உள்ளிட்ட சுமார் 4,07,052 மீட்டர்கள் உள்ளன. இந்நிலையில் மின்கட்டணம் வசூல் செய்ய தனியாருக்கு ஏதுவாக ஒரு ஸ்மார்ட் மின் மீட்டர் ரூ.9,423.36 மதிப்பில் ரூ.383 கோடி அளவில் மாற்றம் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதிய மீட்டர் பொருத்த ரூ.383 கோடி செலவாகும் போது ஏற்கனவே ரூ.200 கோடிக்கு மேல் உள்ள 4 லட்சம் மீட்டர்களையும் அரசு குப்பையில் போடப்போகிறதா? மத்திய ஆட்சியாளருக்கு வேண்டிய ஒரு தனிநபர் பயன்பெற மக்களை பற்றியும், கூடுதல் செலவினங்களை பற்றியும் அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை. தற்போது புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 4 லட்சத்து 7 ஆயிரம் மீட்டர்களும் நல்ல நிலையில் தான் உள்ளது. இவ்வாறு உள்ள மின் மீட்டர்களை மக்கள் தான் தங்களது சொந்த பனத்தில் மின்துறைக்கு செலுத்தி வீடுகளில் மின் மீட்டரை பொருத்தியுள்ளனர். மேலும் சுமார் 33 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் கடந்த ஆட்சியில் புதியதாக பொருத்தப்பட்டது.
![](https://img.seithipunal.com/media/viwquxux-u92rl.png)
ஏற்கனவே பணம் கொடுத்து மீட்டர் பொருத்தியுள்ள நுகர்வோருக்கு அரசு உரிய இழப்பீட்டு தொகையை வழங்குமா? நல்ல நிலையில் இயங்கும் மீட்டரை தனியார் பயன்பெருகின்ற விதத்தில் குறுகிய கண்ணோட்டத்துடன் மாற்றம் செய்வதென்பது பொருளாதார இழப்பு இல்லையா? மின்கட்டண வசூல் ப்ரீபெய்டு சிஸ்டத்தை கொண்டுவர நினைக்கும் தனியாரின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் அரசாக பாஜக கூட்டணி அரசு உள்ளது.
ஸ்மார்ட் மின்மீட்டர் பொருத்தும் பணிகளால் மின்துறையில் பணிபுரியும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். சிங்கில் பேஸ் மீட்டருக்கு மாதம் ரூ.80 வீதமும், த்ரீ பேஸ் மீட்டருக்கு மாதம் ரூ.120 என 7 ஆண்டுகாலத்திற்கு நுகர்வோர்களிடம் இருந்து ஸ்மார்ட் மின் மீட்டருக்கு ஆகும் செலவுக்கான பணம் பிடித்தம் செய்யப்படும். ஏற்கனவே நிலைக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் நுகர்வோர்களிடம் இருந்து அதிகப்படியான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. அத்துடன் புதியதாக பொருத்தப்படும் மீட்டருக்கும் புதியதாக வரி போட்டு வசூல் செய்யப்படும்.
மின்துறை தனியாருக்கு கைமாற்றம் செய்யப்படுவதற்கு முன் எவ்வித சிரமும் இன்றி மின்கட்டண வசூலை மேற்கொள்வதற்காக மாநில மக்களை வஞ்சிக்கும் செயலில் அரசு முடிவு செய்துள்ளது. மேலும் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் நெட்வொர்க் ப்ராப்லம் ஏற்படும் செயலிலிருந்து நம் வீட்டு மின் இணைப்பும் துண்டிக்கப்படும்.
மக்கள் மீது திணிக்கும் மக்கள் விரோத அரசின் இந்த முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் நம் வீட்டு மின் மீட்டரை மாற்றம் செய்ய யாரையும் அனுமதிக்க கூடாது. அப்போது தான் ஆட்சியாளர்கள் சதி செயலை நம்மால் முறியடிக்க முடியும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நம் மீது திணிக்கப்படும் புதிய புதிய சட்டங்களையும், திட்டங்களையம், வரிகளையும் எதிர்த்த மக்கள் எப்படி போராடினார்களோ அதுபோன்ற ஒரு போராட்டத்தை மக்கள் முன்னெடுத்த செல்ல தயாராக வேண்டும். இதில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு அரசே பொருப்பாகும்.
மாநில உரிமை, மக்களின் எண்ணம், மத்திய ஆட்சியாளர்களின் எதேச்சகர போக்குகள், அரசு உயரதிகாரிகளின் ஆணவ செயல்கள் இவை அனைத்தையும் நன்கு புரிந்த வைத்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நம் புதுச்சேரி மாநிலத்தின் சொத்தாக விளங்கும் மின்துறையை யாரோ ஒருவருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் சர்வாதிகார செயலுக்கு தடை போட வேண்டும் என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
The decision to hand over the power sector to someone should be abandoned AIADMK insists