தூத்துக்குடி || அரிவாளால் டிரைவர் வெட்டி கொலை.! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டுநரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் பள்ளங்கிணறு பகுதியை சேர்ந்த பட்டுராஜ் என்பவரது மகன் ரேவந்த்குமார்(27). இவர் சென்னை கோயம்பேட்டில் தங்கி லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இந்நிலையில் ரேவந்த் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தசரா விழாவையொட்டி சொந்த ஊருக்கு வந்தார்.

இதையடுத்து நேற்றிரவு பள்ளங்கிணறு-செட்டிகுளம் சாலையில் உள்ள குடிநீர் தொட்டி அருகே ரேவந்த் குமார் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதைப்பார்த்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சடைந்த நிலையில், இதுகுறித்து சாத்தான்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், மர்ம நபர்கள் அவரை அறிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் ரேவந்த்குமார் கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The driver was hacked to death with a sickle in Thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->