கும்பகோணம்.! 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கும்பகோணத்தில் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பெசன்ட் ரோட்டை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு கேசவ்(வயது 3), கோபிகா(வயது 4) என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நேற்று பச்சையப்பன் தெருவில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ராஜாவின் தங்கை வீட்டில் மகள் கோபிகாவை பார்த்துக்க கொள்ளுமாறு பெற்றோர் விட்டு சென்றுள்ளனர்.

அப்பொழுது கோபிகா நாலாவது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியில் விளையாடி கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கோபிகாவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், கோபிகா இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கும்பகோணம் காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The girl died after falling from the fourth floor in Kumbakonam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->