கழிவு நீர் தொட்டியில் விழுந்ததால் தான் சிறுமி உயிரிழப்பு; பிரேத பரிசோதனை முடிவு..! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி சிறுமி லியா லட்சுமி, கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று  உயிரிழந்தார்.

இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

இதற்கிடையே, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுமி லியா லட்சுமியின் உடல் உடற்கூராய்வு உற்படுத்தப்பட்டு, சிறுமி லியாவின் உடல் அவரது தந்தையிடம் மருத்துவமனை ஒப்படைத்தது. பிரேத பரிசோதனை முடிவில் மாணவி லியா லட்சுமியின் நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் உயிரிழப்பு ஏற்ப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கழிவு நீர் தொட்டியில் விழுந்ததன் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுவரை பிரேத பரிசோதனை அறிக்கை காவல் துறைக்கு மருத்துவக் கல்லூரியில் இருந்து வழங்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The girl died due to falling into a septic tank


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->