மீனவ மக்கள் மீது அரசு மிகுந்த அக்கறையில் உள்ளது..முதலமைச்சர் ரங்கசாமி!
The government is very much concerned about the fishermen Chief Minister Rangasamy
கடல் அரிப்பை தடுக்க கடற்கரை ஓரத்தில் கற்களை கொட்டவும், தூண்டில் முள் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.,
புதுச்சேரி அரசு 15 ஆவது சட்டப்பேரவை 6 ஆவது கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி உறுப்பினர்களுக்கு பதிலளித்துவருகின்றர்.அந்த வகையில் இன்று முதலமைச்சர் ரங்கசாமி பதிலளித்து பேசியது:கடல் அரிப்பை தடுக்க கடற்கரை ஓரத்தில் கற்களை கொட்டவும், தூண்டில் முள் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் கேள்விக்கு முதலமைச்சர் பேரவையில் பதில்.
மினி பேருந்து மற்றும் புதிய பேருந்துகள் அரசு வாங்க உள்ளதால் விரைவில் கிராமப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.கிராமப்புற மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் விதமாக கொம்யூன் வாரியாக மைதானம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரணமாக மத்திய அரசு ரூ.81 கோடி கொடுத்துள்ளதுமாநில அரசின் நலனுக்காக மத்திய அரசிடம் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
புதியதாக விண்ணப்பித்துள்ள 10-ஆயிரம் நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் ஆஷா பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
English Summary
The government is very much concerned about the fishermen Chief Minister Rangasamy