ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
The honesty of the auto driver. The District Superintendent of Police called and applauded
நேர்மைக்கு கௌரவம் எப்போதும் உண்டு.அந்தவகையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு நேர்மைக்கு கௌரவம் கிடைக்கப்பெற்றுள்ளார்.
ஆட்டோவில் சவாரி சென்ற பயணி தவறவிட்ட இரண்டு லட்சத்து அறுபத்தி ஏழாயிரம் (₹2,67,000)ரூபாய் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்.அவரை நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.
குளச்சல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஒட்டி வரும் காமராஜர் சாலையை சேர்ந்த அன்வர்சாதிக் என்பவர் ஆட்டோவில் இன்று காலை 12.00 மணியளவில் பீச்ரோட்டில் சவாரி எடுத்துள்ளார்.
ஆட்டோவில் ஏறிய வாணியக் குடியை சேர்ந்த ஹெலன் இறங்கும் போது கவரில் வைத்திருந்த 2.67 லட்சம் பணத்தை ஆட்டோவில் தவற விட்டுள்ளார். இதை கவனித்த அன்வர்சாதிக் பணத்தை பத்திரமாக எடுத்து குளச்சல் காவல் நிலைய உதவிஆய்வாளர் திரு.தனிஷ்லியோன் அவர்களிடம் ஒப்படைத்தார்.
காவல் துறையினர் மேற்படி உரிமையாளரை கண்டுபிடித்து பணத்தை ஒப்படைத்தனர்.ஆட்டோ ஓட்டுநர் அன்வர்சாதிக்கின் நேர்மையை பாராட்டி மேலும் அவரை ஊக்குவிக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் இரா. ஸ்டாலின் IPS அவர்கள் அன்வர் சாதிக்கை நேரில் அழைத்து நேர்மையை பாராட்டி கௌரவித்தார்கள்.
English Summary
The honesty of the auto driver. The District Superintendent of Police called and applauded