2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு ஆயத்தம்.. ஆண்டிபட்டியில் பூத் கமிட்டி வாரியாக அதிமுக நிர்வாகிகள் ஆய்வு!
Preparations for the 2026 Assembly elections. AIADMK office bearers inspect booth committee in Andipatti
ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக பாக முகவர்கள் நியமனம் குறித்து பூத் கமிட்டி வாரியாக அதிமுக நிர்வாகிகள் சென்று பதிவு செய்யப்பட்ட பாக முகவர்கள் குறித்த விவரங்களை ஆய்வு செய்தனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை அறிவுறுத்தலின்படி ,தமிழக முழுவதும் வர இருக்கின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி நடைபெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் உள்ள கிளைகளில் பாக முகவர்களை தேர்வு செய்து ,நியமனம் செய்யும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு பூத் கமிட்டி வாரியாக அதிமுக நிர்வாகிகள் சென்று பதிவு செய்யப்பட்ட பாக முகவர்கள் குறித்த விவரங்களை ஆய்வு செய்தனர்.
நேற்று ஆண்டிபட்டி ஒன்றியம் பொம்மி நாயக்கன்பட்டி ,டி. சுப்புலாபுரம் ஆகிய பகுதிகளில் ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் ஆகியோர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர், தொகுதி பொறுப்பாளர் ரதிமீனா சேகர், மாநில ஜெ. பேரவை இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நியமன படிவங்களில் உள்ள விவரங்களை ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் அருண்மதி கணேசன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக, சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
English Summary
Preparations for the 2026 Assembly elections. AIADMK office bearers inspect booth committee in Andipatti