STR 49-ல் மீண்டும் காமெடியனாக களமிறங்கினார் சந்தானம்...!!! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Santhanam returns comedian STR 49 his salary
பிரபல தமிழ் திரையுலக முன்னணி நடிகர் 'சிம்பு' அடுத்து நடிக்கும் STR49 படத்தை 'பார்க்கிங்' படத்தின் இயக்குனர் 'ராம்குமார் பாலகிருஷ்ணன்' இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.இந்தப் படம் மிகப்பெரிய மாஸ் மற்றும் கலக்கலப்பான திரைப்படமாக இருக்கும் என்றும், வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல் ஒரு பக்கா கமெர்ஷியல் ஜாலி திரைப்படமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இப்படம் முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்ககூடிய திரைப்படமாக உருவாகி வருகிறது.இதனிடையே, நடிகர் சிம்பு இப்படத்தின் இசையமைப்பாளராக 'சாய் அபயங்கர்' இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார்.
மேலும் படத்தில் நடிகர் சந்தானம் காமெடியன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 10 வருடங்களுக்கு பிறகு நடிகர் சந்தானம் காமெடியனாக இப்படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் நடிப்பதற்காக சந்தானம் ரூ.13 கோடி சம்பளமாக கேட்டதாகவும் அதன் அட்வான்சாக ரூ.7 கோடியை தயாரிப்பாளர் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Santhanam returns comedian STR 49 his salary