தணிக்கை குழுவின் U/A சான்றிதழ் பெற்ற சூர்யாவின் 'ரெட்ரோ' ...!!!
Suriya Retro gets U A certificate from censor board
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் 'கார்த்திக் சுப்பராஜ்' இயக்கியுள்ளார். இப்படம் சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.
இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்தப் படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் 'ரெட்ரோ' படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இது திரையில் 2.48 மணி நேரம்கொண்ட படமாக உருவாகியிருக்கிறது.
அதுமட்டுமின்றி, நாளை மாலை 5 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 'ரெட்ரோ' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Suriya Retro gets U A certificate from censor board