தகராறை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்.! 2 பேரின் காதை அறுத்த கூலித்தொழிலாளி...! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் தகராறை தட்டிக்கேட்ட இரண்டு பேரின் காதை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கரட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் பொம்முலுசாமி (48). இவர் வேலைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக உறவினர்களான யுவராஜ் மற்றும் ஹரிகவுதம் ஆகிய இரண்டு பேரை போடிக்கு அனுப்பி வைத்தார். அப்பொழுது பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த யுவராஜுக்கும் போடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாரதிராஜா(45) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் தகராறு முற்றிய நிலையில் ஆதிரமடைந்த பாரதிராஜா யுவராஜை தாக்கியுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பொம்முலுசாமி பாரதிராஜாவை தட்டி கேட்டுள்ளார். அப்பொழுது பாரதிராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பொம்முலுசாமியின் இடது காதை அறுத்துள்ளார். இதைப் பார்த்து அவ்வழியாகச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தட்டி கேட்டுள்ளார். இதற்கு பாரதிராஜா ஆட்டோ ஓட்டுநரின் இடத்துக்காதையும் கத்தியால் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து இவர்கள் இரண்டு பேரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போடி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பாரதிராஜாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The laborer who cut off the ears of two people was arrested in theni


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->