வீடு இல்லா நாய்களுக்கு உள்ளாட்சி துறை உணவு அளிக்க வேண்டும்..விலங்கு நல அமைப்பு கோரிக்கை!
The local government should feed the homeless dogs Animal Welfare Organisation Demands
புதுச்சேரியில் உள்ள வீடு இல்லா நாய்களுக்கு காவல் துறை, கால்நடை துறை, உள்ளாட்சி துறை இணைத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வாய்ஸ் பார் வாய்ஸ்லெஸ் விலங்கு நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள வீடு இல்லா நாய்களுக்கு கருணை உள்ளதோடு உணவு அளிப்பவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது அதிகரித்து உள்ளது.
கடந்த13.4.2025 அன்று முதலியார்பேட்டை, விடுதலை நகரில் நாய்களுக்கு உணவு அளிக்கும் ஒரு மூத்தாட்டி கடுமையாக தாக்க பட்டார். இது சம்பந்தமாக வாய்ஸ் பார் வாய்ஸ்லெஸ் விலங்கு நல அமைப்பு சார்பாக, தேசிய விலங்கு நல அமைப்பின் பிரதிநிதி அசோக் ராஜ் தலைமையில் புதுச்சேரியின் அனைத்து பகுதியை சார்ந்த உணவு அளிப்பவர்கள் முதலியார் பேட்டை காவல் நிலையத்தை முற்றுகை ஈட்டனர்.
வீடு இல்லா விலங்கு களுக்கு உணவு அளிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. அந்த கடமையை செய்பவரை தடுப்பது சட்டப்படி குற்றம்.மேலும் இது சம்பந்தமாக புதுச்சேரி சட்ட & ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு. கலைவாணன் அவர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் .அந்த மனுவில் கூறியிருப்பதாவது:இந்த மனித, விலங்கு மோதலுக்கு நிரந்தர தீர்வு கானவும், நாய்களுக்குஉணவு கிடைக்கவில்லை என்றால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்தும், இது வரை நடக்கும் நாய்கள் குறித்த சர்ச்சைக்கு மக்களின் தவறான அணுகுமுறை யும், அரசாங்கத்தின் அலட்சியமும் தான் காரணம். இது மேலும் நீடித்தால் மிகப்பெரிய விளைவுகளை மனித இனம் சந்திக்க நேரிடும் என்று அவரிடம் விலகினோம்.
இந்திய அரசியலமைப்பு படியும், தேசிய விலங்கு நல வழிகாட்டுதல் படியும் வீடு இல்லா விலங்குகளுக்கு உணவு, தண்ணீரை உறுதி செய்வது உள்ளாட்சி அமைப்புகளின் கடமை. உணவு அளிக்க விருப்பம் உள்ளவர்களை வைத்து குடியிருப்பு நல சங்கம், உள்ளாட்சி அமைப்பு இணைத்து உணவு அளிக்க வேண்டும். அவர்கள் ஒருமித்து செயல் பட வில்லை என்றால் காவல் துறை, கால்நடை துறை, உள்ளாட்சி துறை இணைத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று PCA act 1960 யை மேற்கோள் காட்டி மும்பை உயர்நிதி மன்றம் தீர்ப்பு ( 9513 of 2921) அளிந்துள்ளது குறிப்பிட தக்கது.
English Summary
The local government should feed the homeless dogs Animal Welfare Organisation Demands