இறால் பண்ணையின் பூட்டையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் அருகே இறால் பண்ணையின் பூட்டையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிபாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் சேருதுர் பாலத்தடி அருகில் இறால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று வழக்கம் போல் இறால் பண்ணையை வந்து பார்த்துள்ளார் அப்போது பண்ணையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளர்.

பின்னர் பண்ணைகுள் சென்று சோதனை செய்துள்ளார். அப்போது  பண்ணையில் இருந்த இரட்டர் மோட்டார், ஜெனரேட்டர் பேட்டரி, இரெட்டர் கேபிள், போக்கஸ் லைட் உள்ளிட்ட சுமார் ரூ5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு மன வேதனை அடைந்தார்.

பிறகு இது தொடர்பாக உடனடியாக ராதாகிருஷ்ணன் கீழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்களுடன் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து இறால் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்ததாவது, இப்பகுதியில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. குறிப்பாக இறால் பண்ணைகளில் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனை தடுக்கும் வகையில் காவலர்கள் இந்த பகுதியில் ரோந்து பணியில் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The lock of the shrimp farm was broken and Rs 5 lakhs stolen


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->