நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும்.. பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர்..! - Seithipunal
Seithipunal


நியூட்ரினோ மையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுமாறு பிரதமருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வுத்தை  கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடித்தத்தில் தெரிவிக்கப்படுள்ளது,

தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில், பல்லுயிரிய வளம் மிகுந்த மேற்கு மலைத்தொடரில் அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ துகள்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சியில் 2010-ம் ஆண்டு முதல் மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. இந்தத் திட்டத்துக்கு தேனி மாவட்ட மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்தத் திட்டத்துக்கு பெறப்பட்ட அனுமதிக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றம், பசுமைத் தீர்ப்பாயம் உள்ளிட்ட அமைப்புகளில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்தநிலையில், தேனி மாவட்டத்தில் மேற்கொள்ளவுள்ள நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படும் சம்பல் குட்டக்குடி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. மலை உச்சியில் 1000 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்ட திட்டமிடப்பட்டுள்ளது . இதனால் பாறை சரிவு, மலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஏற்கனவே 2021 ஜூன் 17 இல் இதுதொடர்பான இது தொடர்பாக மனு அளித்துள்ளது. நியூட்ரினோ திட்டத்தால் தேனி பொட்டிபுரம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். குறிப்பாக வனப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படும் . இயற்கை கட்டமைப்பு சிதைவுகளும் விவகாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே முக்கியம் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கக் கூடாது. நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இதுகுறித்து அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கும், வன விலங்குகள் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படுத்தும் நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும்’ என தெரிவிக்கப்படுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The neutrino project must be abandoned


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->