ஓட, ஓட விரட்டி வாலிபரை வெட்டிய நபர்.. கோவையில் பயங்கரம்...! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (28). இவர் இன்று காலை பாப்பம்பட்டி பிரிவு அருகே நின்று கொண்டிருந்தபோது, திடீரென அங்கு அரிவாளுடன் வந்த வாலிபர் ஒருவர் ஆனந்தை ஓட ஓட விரட்டி விரட்டி வெட்டியுள்ளார். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் காயமடைந்த ஆனந்தை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஆனந்தை வெட்டியது புதுரை சேர்ந்த சந்துரு என்பதும், கள்ளக்காதல் விவகாரத்தில் ஆனந்தை வெட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் ஆனந்தை வெட்டிய சந்துரு சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The person chased the youth to run and cut him with a sickle in kovai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->