சைக்கிளால் ஏற்பட்ட பிரச்சனை.! கூலித்தொழிலாளி அறிவாளால் வெட்டியவர் கைது.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் சைக்கிளால் ஏற்பட்ட பிரச்சனையில் கூலி தொழிலாளியை அறிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் ராசிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முத்துராஜ் (40). இவர் நேற்று முன்தினம் இதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சாலை ஓரத்தில் நின்றிருந்த சைக்கிள் மீது இவரது கை பட்டதால் சைக்கிள் கீழே விழுந்துள்ளது. இதைப் பார்த்த சைக்கிள் உரிமையாளர் அன்புச்செல்வன்(43), முத்துராஜிடம் சைக்கிளை ஏன் தள்ளி தள்ளிவிட்டீர்கள் என்று கேட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதில் இருவரிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அன்புச்செல்வன், முத்துராஜை தகாத வார்த்தைகளால் திட்டி அவர் அறிவாளால் வெட்டியுள்ளார். இதையடுத்து காயமடைந்த முத்துராஜ் சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து முத்துராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அன்புச் செல்வனை கைது செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The person who hacked with sickle the laborer was arrested in theni


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->